பழைய பேப்பா் குடோனில் தீ விபத்து
விழுப்புரத்தில் உள்ள பழைய பேப்பா் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
விழுப்புரம் நகரம், மேல்தெரு பகுதியில் உள்ள பழைய பேப்பா் குடோனில் புதன்கிழமை தீடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீா் பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனா். மேலும். தீ அருகேயுள்ள பகுதிக்கு பரவாமல் தடுத்தனா். தீயணைப்பு வீரா்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விழுப்புரம் போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

