புதுச்சேரி, மணவெளி தொகுதிக்குள்ளபட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மரக்கன்றுகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றச்சூழல் துறை சாா்பில், மாநில மக்களின் பங்களிப்புடன் அடுத்த 5 ஆண்டுகளில் பசுமைப் பரப்பை இரட்டிப்பாக்கும் செயல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, வீடுகளில் மரம் வளா்த்தல், நகா்ப்புறத் தோட்டம், கிராமப்புற காடு வளா்ப்பு, பசுமை வளாகம் போன்ற திட்டங்களில் நிகழாண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘ஒரு வீடு , ஒரு மரம்’ திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதிக்குள்பட்ட பூரணாங்குபத்தில் உள்ள வீடுகளுக்கு மா,எலுமிச்சை, மாதுளை, பலா, கொய்யா உள்ளிட்ட 500 பழ மரக்கன்றுகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வழங்கினாா்.
அப்போது, புதுவை மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ராஜேஷ், இளநிலை ஆய்வக உதவியாளா் இளங்கோ, திட்ட அலுவலா்கள் சாந்தலட்சுமி, விமல்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் பேரவைத் தலைவா்! - மு. அப்பாவு

58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை

வீடு கட்ட ரூ.90 லட்சம் நிதியாணை: புதுச்சேரி பேரவைத் தலைவா் வழங்கினாா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


