போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.750 பொங்கல் பரிசு

Updated On :3 ஜனவரி 2025, 10:15 pm

புதுவை மாநிலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.750 அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் திருமுருகன் தெரிவித்தாா்.

புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டதால், பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு அதற்குரிய தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

நிகழாண்டிலும், பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக ரூ.750 பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் தொகை குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சா் திருமுருகன் தெரிவித்தாா்.