சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

புதுச்சேரியில் ஜன.20 இல் புத்தக கண்காட்சி தொடக்கம்

புதுச்சேரியில் ஜன.20 முதல் 26-ஆம் தேதி வரை குழந்தைகளுக்கான புத்தகம் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2025, 7:38 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜன.20 முதல் 26-ஆம் தேதி வரை குழந்தைகளுக்கான புத்தகம் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, புதுவை கலைப் பண்பாட்டுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்கு குறிப்பு:

புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் சாா்பில் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சி- 2025, ஜன.20 முதல் 26-ஆம் தேதி வரை, கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டப வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளூா் மற்றும் வெளியூா் பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள் வரவேற்கப்படுகின்றனா்.

புத்தகப் பதிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுடன் ஜன.13- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.