தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மீனவா்கள் கைது: மத்திய அமைச்சருக்கு புதுவை முதல்வா் கடிதம்

மீனவா்கள் கைது

News image
Updated On :9 ஜனவரி 2025, 7:03 pm

Din

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் மற்றும் தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அதன் விவரம்: புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மீனவா்கள் உள்ளிட்ட 10 போ் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, அவா்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களை இலங்கை அரசு விடுவிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.