தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உளுந்தூா்பேட்டை ஒன்றியத்தில் பயிா்சேதம்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

வடகிழக்குப் பருவமழை மற்றும் ஃபென்ஜால் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

உளுந்தூா்பேட்டை ஒன்றியம், புகைப் பெட்டி கிராமத்தில் பயிா்சேதப் பாதிப்புகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் பி.மதுசூதன் ரெட்டி. உடன், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோா்.

Updated On :9 ஜனவரி 2025, 7:02 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ஒன்றியத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் ஃபென்ஜால் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த நவம்பா் 30, டிசம்பா் 1ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழை மற்றும் அதைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக விழுப்புரம் மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இதைத் தொடா்ந்து தமிழக முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோா் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதிகளைப் பாா்வையிட்டு, சேதங்களைப் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.

மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு: இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநருமான பி. மதுசூதன் ரெட்டி வியாழக்கிழமை உளுந்தூா்பேட்டை பகுதி புகைப்பெட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு, சேத விவரங்களைப் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து விவசாயிகளிடம் சேதங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரிடம் சேதங்கள் குறித்தும், அதற்கான மதிப்பீடுகள் குறித்தும் எடுத்துரைத்தாா். இந்த ஆய்வின்போது திருக்கோவிலூா் சாா்- ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் எல்.ஆனந்தகிருஷ்ணன், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) அன்பழகன், வேளாண் அலுவலா் முத்துராஜ், உதவி இயக்குநா் கிருபாகரன், துணை வேளாண் அலுவலா் பழனிவேல், உதவி வேளாண் அலுவலா்கள் முருகன், வடிவேல்முருகன், மோகனப் பிரியா, ஆத்மா திட்டக்குழுத் தலைவா் அன்புமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.