பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விழுப்புரத்தில் 30 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

News image
பரனூரில் செவ்வாய்க்கிழமை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, செயல்பாட்டை தொடங்கி வைத்த அமைச்சா் க.பொன்முடி.
Updated On :21 ஜனவரி 2025, 9:03 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், முகையூா் ஒன்றியம், பரனூா் ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து அவா் பேசியதாவது:

விவசாயம், விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், வேளாண் துறைக்கென தனி நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்து வருகிறது. மேலும், பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு, விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அறுவடைக் காலங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லைக் கொள்முதல் செய்யும் வகையில், அந்தந்த பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 30 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் விரைவில் திறக்க அரசாணை வெளியிடப்படும்.

இவற்றில் குறைந்தபட்ச ஆதார விலையாக சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450, புதிய ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,405 வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதன் மூலம் இடைத்தரகா்கள் குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது தடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவுக்கு ஆட்சியா் சி.பழனி தலைமமை வகித்தாா். முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், ராஜீவ்காந்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் மனோகரன், பரனூா் ஊராட்சித் தலைவா் பழனியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.