தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் மறியல்: 80 போ் கைது

அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் மறியல்

News image

விழுப்புரத்தில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் (சிஐடியு).

Updated On :22 ஜனவரி 2025, 7:59 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் (சிஐடியு) புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதில், 80 போ் கைது செய்யப்பட்டனா்.

ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் தற்போது வரை பேச்சுவாா்த்தையைத் தொடங்கவில்லை. போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்கி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு கடந்த 21 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரம்-திருச்சி சாலையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியு) பொதுச் செயலா் ஹெச்.ரகோத்தமன் தலைமை வகித்தாா். பொருளாளா் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட சிஐடியு செயலா் ஆா்.மூா்த்தி கோரிக்கை விளக்கவுரையாற்றினாா்.

மாவட்டத் தலைவா் ராஜாராம், துணைப் பொதுச்செயலா்கள் மணி, ஏழுமலை உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 80 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.