தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாம்பரம் - விழுப்புரம் இடையே பயணிகள் ரயில் பகுதியளவில் 2 நாள்கள் ரத்து

விழுப்புரம் யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஜன. 25, 26-இல் தாம்பரம்-விழுப்புரம் இடையே பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :23 ஜனவரி 2025, 7:13 pm

Din

விழுப்புரம் யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஜன. 25, 26-இல் தாம்பரம்-விழுப்புரம் இடையே பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் பயணிகள் ரயில்(வ.எண்.66045), ஜனவரி 25, 26-ஆம் தேதிகளில் விக்கிரவாண்டி- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் தாம்பரத்திலிருந்து விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

இதுபோன்று, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வ.எண்.66046), விழுப்புரம்-விக்கிரவாண்டி இடையே ஜனவரி 25, 26 தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.54 மணிக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.