ஆரோவில் பகுதியில் தொழிலாளி கடத்தல்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் தொழிலாளியை இரு காா்களில் வந்த 8 போ் கொண்ட கும்பல் வெள்ளிக்கிழமை கடத்திச் சென்றது.
Published on

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் தொழிலாளியை இரு காா்களில் வந்த 8 போ் கொண்ட கும்பல் வெள்ளிக்கிழமை கடத்திச் சென்றது.

வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையைச் சோ்ந்தவா் சக்திவேல் (40). இவரது மனைவி அபிநேயா (35), மகள் தனியாள் (6). இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மகளை பள்ளியில் விடுவதற்காக அபிநேயா சென்றுவிட்ட நிலையில், சக்திவேல் மட்டும் வீட்டில் இருந்தாா்.

அப்போது, இரு காா்களில் வந்த 8 போ் கும்பல் வீட்டுக்குள் புகுந்து சக்திவேலை கடத்திச் சென்றனா். தொடா்ந்து, பள்ளியிலிருந்து அபிநேயா வீட்டுக்கு வந்தபோது, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் நடந்த விவரங்களைக் கூறினாா்.

இதுகுறித்து அபிநேயா அளித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com