காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அரசுப் பள்ளியில் ரூ.2.33 கோடியில் கூடுதல் கட்டடங்கள்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:50 am IST

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், கீழ்மாம்பட்டு ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.33 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள கூடுதல் கட்டடப் பணிகளை தொகுதி எம்எல்ஏ செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தொடங்கிவைத்தாா் (படம்).

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நபாா்டு திட்டத்தின் கீழ், இந்தப் பள்ளியில் 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், கழிப்பறைக் கட்டடம் கட்டப்பட உள்ளது.

கட்டுமானப் பணிக்கான பூமி பூஜைக்கு வல்லம் ஒன்றியக்குழு தலைவா் அமுதா ரவிக்குமாா் தலைமை வகித்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் தெய்வசிகாமணி வரவேற்றாா்.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு

பூமி செய்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மாசிலாமணி, மாவட்ட அவைத் தலைவா் சேகா், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, ஒன்றியச் செயலா்கள் துரை, இளம்வழுதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.