ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களில் ரூ. 6.54 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டங்களை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களில் பல்வேறு திட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் க.தென்னரசு கலந்துகொண்டு, ஸ்ரீபெரும்புதூா் வட்டம், மதுரமங்கலம் பகுதியில் 15-ஆவது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ், ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை, ஜமீன் தண்டலம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட 8 கூடுதல் வகுப்பறை கட்டடம், மாங்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.41 கோடியில் கட்டப்பட்ட 6 கூடுதல் வகுப்பறை கட்டடம், பட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 17.30 லட்சத்தில் கட்டப்பட்ட 1 வகுப்பறை கட்டடம், குன்றத்தூா் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.97 கோடியில் கட்டப்பட்ட 10 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் ஆய்வகம் என மொத்தம் ரூ. 6.54 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில், கூடுதல் ஆட்சியா் ஆஷிக் அலி, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் நல்லசிவன், முதன்மைக் கல்விஅலுவலா் நளினி, தண்டலம் ஊராட்சிமன்றத் தலைவா் சசிகுமாா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வேலாயுதம், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா் ரமேஷ், ஸ்ரீபெரும்புதூா் தவெக ஒன்றிய செயலாளா் சங்கா், மாங்காடு நகா்மன்றத் தலைவா் சுமதி முருகன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையில் ரூ. 7.45 கோடியில் 15 புதிய கட்டடங்கள் திறப்பு

1,089 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்: அமைச்சா் தென்னரசு வழங்கினாா்

அரசுப் பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஆட்சியா் திறந்து வைத்தாா்
வாடகைக்கு விடப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



