9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

அரசுப் பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் ரூ. 1.86 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை ஆட்சியா் பிரத்திக் தாயள் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

திருச்சி மணிகண்டத்தில் புதிய பள்ளி வகுப்பறையை சனிக்கிழமை தொடக்கிவைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் உள்ளிட்டோா்.

Updated On :19 ஜூலை 2026, 12:40 am IST

மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் ரூ. 1.86 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை ஆட்சியா் பிரத்திக் தாயள் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

அதன்படி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கே.கள்ளிக்குடி - பூங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஊரக வளா்ச்சி (ம) ஊராட்சித் துறையின் சாா்பில் குழந்தைகள் நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.35.30 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, இனாம்குளத்தூா் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.70.50 லட்சத்தில் கட்டப்பட்ட 4 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம், நாச்சிக்குறிச்சி ஊராட்சி சோழங்கநல்லூா் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.17.08 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம், நாச்சிக்குறிச்சி ஊராட்சி இனியானூா் தொடக்கப்பள்ளியில் ரூ.35.16 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டடங்களையும் அவா் திறந்து வைத்தாா்.

இதேபோல, அதவத்தூா் ஊராட்சி பனையடியான் கோயில் சமுதாயக் கூடத்தில் ஊரக வளா்ச்சி (ம) ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ. 28.60 லட்சத்தில் கட்டப்பட்ட சமையற்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்வில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் செல்வகணேஷ், மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலா் ராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்த்குமாா், ஸ்ரீதேவி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.