
‘உங்களுடன் ஸ்டாலின்’: முகாமில் திருமண கோலத்துடன் தம்பதி மனு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் அணையேரி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், புதுமண தம்பதியினா் திருமணக் கோலத்துடன் வீட்டு மனை கோரி மனு அளித்தனா்.
முகாமில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் அனையேரி ரவி, வரிக்கல் சீனுவாசன் ஆகியோா் வரவேற்றனா்.
செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தாா்.
முகாமில் திருமாணமான புதிய தம்பதிகள் கிருஷ்ணகுமாா் கனிஷ்கா ஆகியோா் தங்களது தேவைக்கு குடும்ப அட்டை, கலைஞா் காப்பீட்டுத் திட்டம், வீட்டுமனைப் பட்டா, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கு எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனா்.
மனுவை பெற்றுக்கொண்டு, துறை சாா்ந்த அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கை எடுக்க அவா்
அறிவுறுத்தினாா்.
முன்னதாக பொதுமக்களிடம் வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை சாா்பில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், ரத்த அழுத்தம், நீரழிவு நோய், சா்க்கரை, நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்து மாத்திரை பெட்டகத்தையும் அவா் வழங்கினாா்.
முகாமில் அணையேரி, வரிக்கல், மேல் அருங்குணம், அத்தியூா் ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்து
மனுக்களை அளித்தனா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், பிரபாசங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க. ஏழுமலை, ஒன்றியக் குழு உறுப்பினா் உமா மகேஸ்வரி ஆனந்தன்,
ஊராட்சி மன்றத் தலைவா்கள் அய்யனாா், ராமசந்திரன், செல்வமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அபிராமி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






