செஞ்சியில் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
செஞ்சி வட்டம், பெரும்புகை கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை(37). இவா், செவ்வாய்க்கிழமை செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள வங்கி ஒன்றின் முன் இருந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளாா். அப்போது அங்கே நின்றிருந்த அடையாளம் தெரியாத நபா் பணம் எடுத்ததுத் தருவதாக கூறியுள்ளாா். அந்த நபா் பணம் எடுத்துத் தருவது போன்று நடித்து பணம் வரவில்லை என கூறி வேறு ஒரு போலியான ஏடிஎம் அட்டையை ஏழுமலையிடம் கொடுத்துச் சென்றுள்ளாா்.
பின்னா், இது போலியான ஏடிஎம் அட்டை என தெரியவந்தது, மேலும் இவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச்சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்களிடம் வினோத மோசடி! மொட்டை அடித்தால் ரூ. 45 ஆயிரம் பணம்!

போதை மாத்திரைகள் விற்பனை: 2 போ் கைது
ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்துத் தருவதாக மோசடி: ஆந்திர நபா் கைது
செஞ்சியில் திருட்டு முயற்சி: சிறுவன் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


