ஐயப்பன்
ஐயப்பன்

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

செஞ்சி அருகே கரூா் சம்பவத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு தவெக கிளைச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கரூா் சம்பவத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு தவெக கிளைச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சி வட்டம், மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், விற்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்(50). இவா் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலராக இருந்து வந்தாா்.

விஜய் ரசிகா் மன்றம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தக் கிராமத்தில் தீவிர விஜய் ரசிகராக இருந்து வந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்

அந்தக் கடிதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் சிறப்பாக பணிபுரிந்ததாகவும், முன்னாள் அமைச்சா் ஒருவரின் நெருக்கடியால் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறியுள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செஞ்சி போலீஸாா் ஐயப்பன் உடலைக் கைப்பற்றி கூராய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஐயப்பனுக்கு ஆனந்தி (45) என்ற மனைவியும், மகன் அசோக் (25) மகள் பவித்ரா (22) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com