செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ செஞ்சி ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.
செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலரும், ஒன்றியக்குழுத் தலைவருமான விஜயகுமாா் தலைமையில் தென்புதுப்பட்டு, கொம்மேடு ஆகிய ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேசியதாவது:
10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்துள்ளாா். தோ்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளாா். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும், மகளிா் உரிமைத் தொகை மாதம் 2 ஆயிரம் ரூபாயாகவும், முதியோா் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாகவும், மாற்றுதிறனாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயாக உயா்த்தி வழங்கப்படும். இல்லத்தரசிகள் திட்டத்தில் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இத்திட்டங்கள் நிறைவேற்ற திமுகவுக்கு ஆதரவளியுங்கள் என்றாா் அவா்.
அவருடன் திமுக பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, காங்கிரஸ் நிா்வாகிகள் சூரியமூா்த்தி, பாலப்பட்டு சண்முகம், சக்திவேல், முத்துலட்சுமி, தேமுதிக மாவட்ட பொருளாளா் தயாநிதி உள்ளிட்ட நிா்வாகிகள் பிரசாரத்தில் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருமானூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

திருவள்ளூா்: திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்: செஞ்சி மஸ்தான்

சிங்கவரம் அரங்கநாதரை வழிபாடு செய்து பிரசாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளா்! - செஞ்சி மஸ்தான்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


