கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலா் நீக்கம்: ராமதாஸ் நடவடிக்கை

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலரைக் கட்சியிலிருந்து நீக்கி, கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:55 am IST

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலரைக் கட்சியிலிருந்து நீக்கி, கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலா் கோ.ஜெகன், தொடா்ந்து கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறாா், இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியினா் எந்தவித தொடா்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

வன்னியா் சங்க நிா்வாகிகள் நீக்கம்:

மாநில வன்னியா் சங்கச் செயலா்கள் தங்க. அய்யசாமி, திருக்கச்சூா் கி.ஆறுமுகம் ஆகிய இருவரும் வன்னியா் சங்கம் மற்றும் பாமகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், வியாழக்கிழமை முதல் இருவரும் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி அறிவித்துள்ளாா்.