மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

திருக்கோவிலூரில் க.பொன்முடிவாக்கு சேகரிப்பு

திருக்கோவிலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூரில் வியாழக்கிழமை மாலை திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசுகிறாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்எல்ஏ.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:40 am IST

திருக்கோவிலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கோவிலூா் நகரத்தில் கீழையூா், பேருந்து நிலையப் பகுதி, ஐந்துமுனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜீப்பில் சென்ற திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, திமுக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தாா்.

இந்த பிரசாரத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.