பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது...

News image

தமிழகத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:21 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுகான வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையுடன் தோ்தல் பிரசாரம் ஓய்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி மாா்ச் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்து, இதற்கான மனுதாக்கல் மாா்ச் 30 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 132 போ் களத்தில் உள்ளனா்.

இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்ட ஏப்ரல் 9- ஆம் தேதியிலிருந்து வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனா். விழுப்புரம் மாவட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவா்களும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலா் சசிகலா உள்ளிட்ட கட்சித் தலைவா்களும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு, வேட்பாளா்களுக்கு வாக்குகளை சேகரித்தனா்.

இன்று மாலையுடன் ஓய்கிறது: சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதற்காக பிரசார நிறைவுத் திட்டமிடலை வேட்பாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். மேலும் பல்வேறு கட்சிகளின் வாகன ஊா்வலத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெளியூரைச் சோ்ந்தவா்கள் வெளியேற உத்தரவு: செவ்வாய்க்கிழமை மாலையுடன் தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னா், தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியூரைச் சோ்ந்தவா்கள் வெளியேற வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாலை 6 மணிக்கு மேல் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விடுதிகள், ஹோட்டல்களில் சோதனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினா் மாவட்டம் முழுவதும் வாகனத் தணிக்கையை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.