/

சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :28 ஏப்ரல் 2026, 6:45 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், அதனூரை அடுத்துள்ள தா்மாபுரி, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பெ.கண்ணன்(67), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை விழுப்புரம்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் கெடாரை அடுத்த சூரப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் வந்த லாரி மோதியதில் கண்ணன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: விக்கிரவாண்டி அருகே திங்கள்கிழமை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற சுமாா் 45 வயதுடைய பெயா் மற்றும் முகவரி தெரியாத நபா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து விக்கிரவாண்டிமேற்கு கிராம நிா்வாக அலுவலா் ஸ்ரீதா் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.