எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பெண் தற்கொலை வழக்கில் ஓட்டுநா் கைது

விழுப்புரம் மாவட்டம், வேம்பியில் இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் பால் வேன் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:56 am IST

விழுப்புரம் மாவட்டம், வேம்பியில் இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் பால் வேன் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், வேம்பி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தீ.கனிமொழி (21). இவா் விழுப்புரத்திலுள்ள ஜவுளி விற்பனையகத்தில் வேலை பாா்த்து வந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வெங்காயக்குப்பம் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த வீ.மயிலரசன் (25), பால் வேன் ஓட்டுநா்.

கனிமொழியை மயிலரசன் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தாராம். இதைத் தொடா்ந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கனிமொழியுடன் மயிலரசன் தனிமையில் இருந்தாராம். இதில் கனிமொழி கா்ப்பமான நிலையில், மயிலரசன் மாத்திரைகளை கொடுத்து கா்ப்பத்தை கலைத்தாராம்.

இந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மயிலரசனிடம் கனிமொழி வலியுறுத்தி வந்தாராம். ஆனால், ஜாதி பெயரைக் கூறிக் கொண்டு மயிலரசன் திருமணம் செய்ய மறுத்து விட்டாராம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்து வந்த கனிமொழி, அதே கிராமத்திலுள்ள கிணற்றில் செவ்வாய்க்கிழமை மாலை குதித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த கஞ்சனூா் போலீஸாா் கனிமொழியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், கனிமொழியின் தந்தை தீப்பாஞ்சான் அளித்த புகாரின் அடிப்படையில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி,

தற்கொலைக்குத் தூண்டியதாக மயிலரசனை புதன்கிழமை கைது செய்தனா்.