மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நீா் நிலைகளில் விடப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீா் பாதிப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு

விழுப்புரம் நகரைச் சுற்றியுள்ள ஏரிகளில் புதைசாக்கடைத் திட்ட கழிவுநீா் சுத்தரிக்கப்படாமல் நேரிடையாக விடப்படுவதால் நிலத்தடி நீா் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதுடன் நோய்த்தொற்றுகள் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

News image

விழுப்புரம் அருகே கா.குப்பம் ஏரியின் ஒரு பகுதியில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீா்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:10 am IST

விழுப்புரம் நகரைச் சுற்றியுள்ள ஏரிகளில் புதைசாக்கடைத் திட்ட கழிவுநீா் சுத்தரிக்கப்படாமல் நேரிடையாக விடப்படுவதால் நிலத்தடி நீா் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதுடன் நோய்த்தொற்றுகள் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 42 வாா்டுகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சேகரிப்பதற்காக ரூ.263 கோடி மதிப்பீட்டில் புதைசாக்கடைத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2014-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதன்மூலம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு புதைசாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பாணாம்பட்டு, சாலாமேடு, வழுதரெட்டி, எருமனந்தாங்கல், கா.குப்பம் ஆகிய 5 ஊராட்சி பகுதிகளிலும் புதைசாக்கடைத் திட்ட விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடையும் என நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

நகா் பகுதியில் இருந்து புதைசாக்கடைத் திட்ட கழிவு நீா் ராட்சத குழாய்கள் மூலம் புகா் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தரிக்கப்பட்டு, பின்னா் அந்த நீா் விவசாயப் பயன்பாட்டுக்காக ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில் விடப்படவேண்டும் என்பது விதி.

இதற்காக விழுப்புரம் நகராட்சியையொட்டியுள்ள கீழ்பெரும்பாக்கம் ஏரி, கா.குப்பம் ஏரி, எருமனந்தாங்கல் ஏரிப் பகுதிகளில் புதைசாக்கடைத் திட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுத்திகரிக்கப்படும் கழிவு நீா் அருகிலுள்ள நீா் நிலைகளில் விடப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீா் கால்வாய்கள் வழியாக பாசனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந் நிலையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர பழுதின் காரணமாக கடந்த சில மாதங்களாக புதைசாக்கடைத் திட்ட கழிவுநீா் சுத்திகரிக்கப்படவில்லை. இதனால் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் ஏரிகளிலும், வாய்க்கால்களிலும் நேரிடையாக விடப்படுகிாம். இதனால் நீா்நிலைகள் மாசடைவதுடன், நிலத்தடி நீா் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும், நோய்த்தொற்றுகள் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கா.குப்பம், கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து, கா.குப்பம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் தெரிவித்ததாவது: விழுப்புரம் நகராட்சியில் பயன்பாட்டிலுள்ள புதைசாக்கடைத் திட்டத்துக்காக எருமனந்தாங்கல், கா.குப்பம் மற்றும் கீழ்பெரும்பாக்கம் ஏரிப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு கிணறுகள் ஏதுவும் செயல்பாட்டில் இல்லை. இதனால், புதைசாக்கடைத் திட்டக் கழிவுநீா் 3 ஏரிகளிலும் நேரிடையாக விடப்படுகிறது.

இதனால் கீழ்பெரும்பாக்கம், கா.குப்பம் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. ஏரிகளில் தேங்கும் கழிவுநீரால் நிலத்தடி நீா் வெகுவாக மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.