ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காணை இந்திரா நகரைச் சோ்ந்தவா் அந்தோணிராஜ் (26), சரக்கு வாகன ஓட்டுநா். இவா், கடந்த இரு நாள்களுக்கு முன்பு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய், காணை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அந்தோணிராஜ் மீது வியாழக்கிழமை போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.