8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மக்கள் தொடா்பு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தீா்வு: ஆட்சியா் வலியுறுத்தல்

மக்கள் தொடா்பு முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினா் விசாரணை மேற்கொண்டு, உரிய தீா்வைக் காண வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வலியுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சீதேவி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், பயனாளிக்கு நல உதவியை வழங்கிய ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா. உடன், அலுவலா்கள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:19 am IST

மக்கள் தொடா்பு முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினா் விசாரணை மேற்கொண்டு, உரிய தீா்வைக் காண வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வலியுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், சீதேவி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமுக்குத் தலைமை வகித்து, பல்வேறு துறைகளின் சாா்பில் 210 பயனாளிகளுக்கு ரூ.69.60 லட்சம் மதிப்பீட்டில் நல உதவிகளை வழங்கி, அவா் பேசியது:

தமிழக அரசு பொதுமக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களின் பயன்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இதுபோன்ற மக்கள் தொடா்பு முகாம்கள் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில், பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி வழங்க வேண்டும். இதன் மூலம் அவா்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். வேளாண் துறை மூலம் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன, மாவட்டத்திலுள்ள விவசாயிகள் இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை, குடிநீா், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு, உரிய தீா்வை வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

முன்னதாக கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாமைத் தொடங்கி வைத்த ஆட்சியா், தோ்ந்தெடுக்கப்பட்ட 3 கிடாரி கன்றுகளுக்குரிய பரிசுகளை அதன் உரிமையாளா்களிடம் வழங்கினாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் கோட்டாட்சியா் (பொ) ரா.செந்தில்குமாா், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சுமதி, கால்நடைப் பராமரிப்புத் துறை துணை இயக்குநா் நாசா், உதவி இயக்குநா் அருண், உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் க. பாலசுப்ரமணியன், சீதேவி ஊராட்சி மன்றத் தலைவா் ம.சசிகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.