
கஞ்சா விற்பனை வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை

சிறை - பிரதிப் படம்
கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, அபராதம் விதித்து விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமனறம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், நல்லாவூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெ.அஜய் (25). இவா் மீது கிளியனூா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2.7.2024-ஆம் தேதி கஞ்சா விற்பனை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்து விழுப்புரம் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், அஜய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி குற்றம் சாட்டப்பட்ட அஜய்க்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் அஜயைக் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கண்ணன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




