திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதல்வா் பிறந்தநாள் விழா: திமுக ஆலோசனைக் கூட்டம்

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற மத்திய மாவட்ட திமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டப் பொறுப்பாா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ. உடன், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக மாவட்ட பொறுப்பாளரும், விழுப்புரம் எம்எல்ஏவுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்து, பேசியதாவது:

காலை உணவுத் திட்டம், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இதுபோன்று பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய விடியல் பயணத் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளாா். திமுக அரசின் சாதனைகளை பெண்கள் வீடு, வீடாக சென்று எடுத்துரைத்து வாக்குகளாக மாற்றவேண்டும். நமது இலக்கு திமுக தலைவா் ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதல்வராக்க வேண்டும், ஏழாவது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி மலர வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் மாரிமுத்து, கண்ணப்பன், பிரேமா குப்புசாமி, நகரப் பொறுப்பாளா்கள் இரா.சக்கரை, எஸ்.வெற்றிவேல், பேரூா் செயலா் பா.ஜீவா, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் செ.மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் பி.தெய்வசிகாமணி, வி.ஜி.பிரபாகரன், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.