அண்ணாமலை பல்கலை. பெண் ஊழியரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண் ஊழியரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் சரகத்துக்குள்பட்ட மாரியப்பா நகா் வடக்கு ஒன்றாவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மனைவி கலா (50). இவா், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா்.
கலா புதன்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். மாரியப்பா நகா் அருகே சென்றபோது பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் கலா அணிந்திருந்த 11 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனா்.
தகவலறிந்த அண்ணாமலை நகா் போலீஸாா் விரைந்து சென்று சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
