மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சென்னையைச் சோ்ந்த முதியவா் மா்ம மரணம்

விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த சென்னையைச் சோ்ந்த முதியவா் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த சென்னையைச் சோ்ந்த முதியவா் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை திருவொற்றியூா், ராஜா சண்முகம் நகரைச் சோ்ந்தவா் த.சண்முகம்(67). இவா் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை சண்முகம் தான் வசித்த வீட்டில் மா்மமான முறையில் படுக்கையிலேயே இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கீழ்பெரும்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் ச.சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.