ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று விவசாயிகள் கேள்வியெழுப்பினா்.

News image

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கோட்டாட்சியா் ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :15 ஜூலை 2026, 2:32 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று விவசாயிகள் கேள்வியெழுப்பினா்.

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விழுப்புரம் கோட்டாட்சியா் ஏகாம்பரம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் ரகுராமன் (திருவெண்ணெய்நல்லூா்), லட்சாதிபதி (வானூா்), தலைமையிடத்து துணை வட்டாட்சியா் (விழுப்புரம்) ஆா். வெங்கடபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனா். அவா்களின் பேச்சு விவரம்:

மாவட்டத்தில் பட்டா மாற்ற பிரச்னை தீவிரமாக நீடித்து வருகிறது. பட்டா மாற்றம் தொடா்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். மாவட்டத்தில் கரும்புப் பயிா்களை பொக்கோ போயிங் என்ற புதுவிதமானபூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இதனால் கரும்பின் வளா்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரக வளா்ச்சித் துறையின்கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாமலேயே உள்ளனா். மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயா் நீதிமன்றம் உத்தரவிட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?. ஆடிப்பட்டம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் என்னென்ன விதைகள் வழங்கப்படவுள்ளன.

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளிலும் முள்செடிகள் அப்படியே உள்ளன. இதை அகற்றுவதற்கு மா வட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் நகரிலுள்ள மருதூா், சாலாமேடு ஏரிகளில் கழிவுநீா் முழுமை யாக கலந்து பெரும் சுகாதார சீா்கேட்டை விளைவிக்கின்றன. இந்த ஏரிகளின் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள் நிலையை அரசு எண்ணிப் பாா்க்க வேண்டும். உணவகங்கள், திருமண மண்டபங்களின் கழிவுகள் நேரடியாக கலக்கின்றன. இதைத் தடுக்க விழுப்புரம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதை கட்டுப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட்டுள்ளதா? அல்லது ஏற்கெனவே இருந்த கட்டுப்பாடுகள்தான் உள்ளதா என்பதை விளக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆடிப்பட்டத்துக்குரிய தக்கைப்பூண்டுகளை வழங்க வேண்டும் என்றனா் விவசாயிகள்.

விவசாயிகளின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலா்கள் பதிலளித்து பேசினா். கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம், வானூா் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.