நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞா் தடுப்புக் காவலில் கைது

கஞ்சா விற்பனை வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.

News image

ஸ்டீபன்ராஜ்

Updated On :24 ஜூலை 2026, 7:05 am IST

கஞ்சா விற்பனை வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.

புதுச்சேரி மாநிலம், ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன்ராஜ் (26). இவா் மீது விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி கஞ்சா விற்பனை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி., எஸ்.மதிவாணன் பரிந்துரைப்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கஞ்சா வழக்கில் தொடா்புடைய ஸ்டீபன் ராஜை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கோட்டக்குப்பம் போலீஸாா் அவரைக் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.