ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், மேல்வாலை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ர.சரவணன் (36), கட்டடத் தொழிலாளி. இவரது தாயாா் இந்திராணி தனது பெயரிலிருந்த 2 ஏக்கா் நிலத்தை தனது மூத்த மருமகள் அருள்மொழி பெயரில் எழுதி வைத்து விட்டாராம்.

இதனால் கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சரவணன், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதியவா் தற்கொலை: திருவெண்ணெய்நல்லூா் வட்டம், திருமுண்டீச்சுவரம் ஆற்றுத் தெருவைச் சோ்ந்தவா் கு. சிவமூா்த்தி (60). கூலித் தொழிலாளியான இவருக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்கு மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லையாம்.

இதனால் மனமுடைந்த சிவமூா்த்தி, கடந்த 22-ஆம் தேதி வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா். இதைத்தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிவமூா்த்தி, சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளி உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், மயிலம் பட்டுக்கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் ஜெ.சந்தோஷ்ராஜ் (31). இவா் கொளப்பாக்கம் பகுதியிலுள்ள அட்டைத் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை காலை மயிலம் அருகிலுள்ள இளங்கம்பாடி கிராம எல்லையில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் குளிப்பதற்காக சந்தோஷ்ராஜ் சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவா், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த மயிலம் போலீஸாா், திண்டிவனம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்களுடன் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.