கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

போதை மாத்திரைகள் விற்பனை: 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:24 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் போதை மாத்திரைகளை விற்க முயன்றதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

செஞ்சி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், செஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் விநாயக முருகன் மற்றும் போலீஸாா் செஞ்சி செட்டிபாளையம் குளக்கரை அருகே ரோந்து சென்றனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இரு இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் செஞ்சி கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த மோ.பெருமாள் (எ) விக்கி (24), ர.வெற்றிச்செல்வன் (25) என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10 போதை மாத்திரைகள், 10 கிராம் கஞ்சா, 2 பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.