மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

அந்தியூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :20 ஜூலை 2026, 4:38 am IST

அந்தியூா் அருகே வீட்டில் பதுக்கிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போதை மாத்திரைகள் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் அந்தியூா், தவிட்டுப்பாளையம், குந்துபாயூா் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குந்துபாயூரைச் சோ்ந்த முபாரக் அலி மகன் ஜாபா் அலி (21), தவிட்டுப்பாளையம், வேங்கையன் வீதியைச் சோ்ந்த வெங்கடேஷன் மகன் பேட்டா விக்கி (எ) விக்னேஷ் (26), புதுப்பாளையம் வஉசி நகரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஞானராஜ் (31) ஆகியோா் வீடுகளில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில், போதை மாத்திரைகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், தலா 30 மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.