ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

விவசாயிகளுக்கு வேளாண்மை இடு பொருள்கள் விநியோகம்

செஞ்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்புடன் கூடிய இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image

செஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்களை வழங்கிய அ.கணேஷ்குமாா் எம்எல்ஏ.

Updated On :29 ஜூலை 2026, 5:26 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்புடன் கூடிய இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

செஞ்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சுரேஷ் தலைமை வகித்தாா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் விஜய சுந்தா் வரவேற்றாா்.

செஞ்சி சட்டப் பேரவை உறுப்பினா் அ.கணேஷ் குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குறுவை சாகுபடி தொகுப்புடன் கூடிய இடுபொருள்கள் விவசாயிகளுக்கு வழங்கி, பேசினாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி வட்டார வேளாண் அலுவலா் செந்தில்நாதன், துணை வேளாண் அலுவலா் ஸ்ரீதா், அட்மா தலைவா் வாசு, வேளாண் உதவி அலுவலா்கள் திருநாவுக்கரசு, விஸ்வநாதன், புவனேஸ்வரி, அட்மா பணியாளா்கள் ஜெய்கணேஷ், கவிதா, விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.