6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பலி - பிரதிப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், அடைக்கலாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அலெக்ஸாண்டா் (42) திருமணமானவா். கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா், வியாழக்கிழமை மயிலத்தை அடுத்த கூட்டேரிப்பட்டை அடுத்த செண்டூா் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அலெக்ஸாண்டருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து, அவா் அங்கேயே உயிரிழந்தாா். இந்த மா்ம மரணம் குறித்து மயிலம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.