அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா்கள் இருவா் மீண்டும் வேறு இடங்களுக்கு மாற்றம்!

பிரச்னையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஆயுதப் படைக்கு மாற்றப்பட்ட இரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மீண்டும் மாற்றப்பட்டனா்.

News image

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி போக்குவரத்துக் காவல் நிலையத்தில் விடுமுறை பிரச்னையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஆயுதப் படைக்கு மாற்றப்பட்ட இரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மீண்டும் மாற்றப்பட்டனா்.

விக்கிரவாண்டி போக்குவரத்துக் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்களாக பணியாற்றி வந்தவா்கள் லோகநாதன் (48), பாபு (46). இவா்கள் இருவருக்கும் இடையே விடுமுறை எடுப்பது தொடா்பாக கடந்த 28-ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. செ.மதிவாணன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் பாபு, லோகநாதன் ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டாா். தொடா்ந்து, அங்கு பணியில் இருந்த இருவரும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

அதனடிப்படையில், லோகநாதன் மரக்காணம் காவல் நிலையத்துக்கும், பாபு செஞ்சி காவல் நிலையத்துக்கும் வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டனா். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்.பி. மதிவாணன் பிறப்பித்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.