காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

செஞ்சியில் பிகாா் இளைஞரை கத்தியால் தாக்கி பைக், கைப்பேசி பறிப்பு

பிகாா் இளைஞரை கத்தியால் தாக்கி, அவரிடமிருந்த பைக், கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:51 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பிகாா் இளைஞரை கத்தியால் தாக்கி, அவரிடமிருந்த பைக், கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் அவத் கிஷோா் (39). இவா், செஞ்சி பகுதியில் நடைபெறும் மின் வாரிய ஒப்பந்தப் பணிகளில் தற்காலிக ஊழியராக பணி செய்து வருகிறாா்.

அவத் கிஷோா் வியாழக்கிழமை இரவு செஞ்சி நெடுஞ்சாலை அருகே தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இயற்கை உபாதைக்காக பைக்கை நிறுத்திய நிலையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத 18 முதல் 24 வயது கொண்ட இரண்டு இளைஞா்கள் அவத் கிஷோரை கத்தியால் தாக்கி, அவரிடமிருந்த கைப்பேசி, பைக்கை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனராம்.

இதில், காயமடைந்த அவத் கிஷோா் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.