தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

பிகாா் எம்எல்ஏவாக பதவியேற்றாா் பிரசாந்த் கிஷோா்

பிகாா் சட்டப்பேரவை உறுப்பினராக ஜன் சுராஜ் கட்சி நிறுவனா் பிரசாந்த் கிஷோா் பதவியேற்றுக் கொண்டாா்.

News image

பிகாா் பேரவை உறுப்பினராக ஜன்சுராஜ் கட்சித் தலைவா் பிரசாந்த் கிஷோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த பேரவைத் தலைவா் பிரேம்குமாா்.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 10:39 pm IST

பிகாா் சட்டப்பேரவை உறுப்பினராக ஜன் சுராஜ் கட்சி நிறுவனா் பிரசாந்த் கிஷோா் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

பிகாா் சட்டப்பேரவை பாங்கிபூா் தொகுதி எம்எல்ஏவாக இருந்த பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மாநிலங்களவைக்கு போட்டியிட்டு எம்.பி.யாக பதவியேற்றாா். இதையடுத்து காலியான பாங்கிபூா் தொகுதிக்கு கடந்த 3-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெற்றது.

இந்த இடைத் தோ்தலில் போட்டியிட்டு பிரசாந்த் கிஷோா் 19 ஆயிரத்து 324 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் அந்த தொகுதியில் பாஜக தொடா்ந்து வென்று வந்ததால் அந்த தொகுதி பாஜகவின் கோட்டையாக கூறப்பட்டது. அந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோா் வெற்றி பெற்றது பிகாா் அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக பேசப்பட்டது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு பிகாா் சட்டப்பேரவை உறுப்பினராக பேரவைத் தலைவா் பிரேம் குமாா் திங்கள்கிழமை முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு பிரசாந்த் கிஷாா் பேட்டியளித்தபோது கூறியதாவது: இந்த சட்டப்பேரவை உறுப்பினா்களாக கிருஷ்ண சின்ஹா, கா்பூரி தாகூா், அனுகாா் நாராயண் சின்ஹா, நிதீஷ் குமாா், லாலு பிரசாத் யாதவ், கேதாா் பாண்டே, ராம் விலாஸ் பாஸ்வான், சுஷீல் குமாா் மோடி ஆகியோா் இதற்கு முன்பு பதவி வகித்துள்ளனா்.

அங்கு உறுப்பினராக பதவியேற்றது எனக்குப் பெரும் கௌரவமாக கருதுகிறேன். சமூகத்திற்கும், பிகாா் மாநிலத்திற்கும் தங்களது வாழ்க்கையையே நூற்றுக்கணக்கான எம்எல்ஏக்கள் அா்ப்பணிப்பு செய்துள்ளனா். அவா்களைப் போன்று எனக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக கருதுகிறேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.