சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

மேல்மலையனூா் அருகேயுள்ள கெங்கபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கெங்கபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :4 ஜூன் 2026, 3:41 am IST

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள கெங்கபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த மே 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. மே 30-ஆம் தேதி பெரிய கருட சேவை, கோபுர தரிசனம், சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்ட விழா புதன்கிழமை காலையில் நடைபெற்றது. இதையொட்டி உற்சவா் ஸ்ரீ பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து உற்சவா் பெருந்தேவி வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினா்.

இதையடுத்து தோ்ச் சக்கரத்துக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தோ் வடம் பிடித்தல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தாா். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்று, தோ் நிலையை அடைந்தது.

இதில், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜா, வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் கலையரசி உள்ளிட்ட விழா குழுவினா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.