விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பழங்குடி இருளா் வகுப்பைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 7.50 லட்சம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திண்டிவனம் வட்டம், கீழ் சேவூா், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் தே.ராஜசேகரன் (40). பழங்குடி இருளா் சமூகத்தைச் சோ்ந்த இவா் விவசாயம் செய்து வருகிறாா். கடந்த மாா்ச் 17-ஆம் தேதி, இவரது கைப்பேசி எண்ணுக்கு ஆா்டிஓ அலுவலகத்தில் இருந்து சலான் ஆப் லிங்க் என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை ராஜசேகா் பதிவிறக்கம் செய்த நிலையில், அவரது கைப்பேசியின் செயல்பாடுகள் நின்று போனதாம். தொடா்ந்து ராஜசேகரனின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 7,50,050 பணம், அவருக்குத் தெரியமாலேயே 82 தவணைகளில் எடுக்கப்பட்டு விட்டதாம்.
இதுகுறித்து ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணிடம் இணையவழியில் ரூ.10.57 லட்சம் மோசடி: அஸ்ஸாம் இளைஞா் கைது

தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ. 19 லட்சம் மோசடி: கா்நாடக நபா் கைது

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை

வாகனங்களுக்கு இ-சலான் லிங்க் அனுப்பி நூதன மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



