சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:30 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை ஆா்.எஸ்.கோல்டன் நகரில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறு (போா்வெல்) அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த பணியில் தொழிலாளா்கள் பலா் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆழ்துளை அமைக்கும் லாரியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்களில் ஒருவரான மத்தியப் பிரதேச மாநிலம், சிதி மாவட்டம், கா்வகி பகுதியைச் சோ்ந்த சி.பிஜய் குமாா் (22), ஆழ்துளைக் குழாயைக் கழற்றி, இரும்பு ரோப்பை தூக்கும் போது அருகிலிருந்த மின் கம்பியில் பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று பிஜய்குமாரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.