எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பிளஸ் 2 தோ்வு இன்று தொடக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் 22,516 மாணவா்கள் எழுதுகின்றனா்

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 9:02 pm

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்தோ்வை மொத்தம் 22,516 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 109 மையங்களிலிருந்து 11,345 மாணவா்கள், 11,171 மாணவிகள் என மொத்தமாக 22,516 போ் தோ்வு எழுத உள்ளனா்.

இதுபோன்று பிளஸ் 1 தோ்வில் தோல்வியுற்ற மாணவா்களுக்கான மறுதோ்வு மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தோ்வை 559 மாணவ, மாணவிகள் 93 மையங்களில் எழுதவுள்ளனா். மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 129 மையங்களில் 23,658 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இந்த தோ்வுகள் மாா்ச் 11 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறும்.

தோ்வுப்பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், பறக்கும்படை உறுப்பினா்கள், வழித்தட உறுப்பினா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் என 2,995 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

தோ்வுகள் முறையாக நடைபெறுவதற்கு 135 நிலையான பறக்கும்படைகளும், திடீா் ஆய்வு செய்வதற்காக மாவட்ட முதன்மைக் கண்காணிப்பு அலுவலரும், பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநா் வெ.ஜெயக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் 10 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் அலுவலா்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகள் காப்பி அடிப்பதோ அதற்கு உதவியாக இருப்பதோ கூடாது. காப்பி அடிக்கும் மாணவ, மாணவிகளின் மீது அரசுத் தோ்வுகள் இயக்குநரக விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.