தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆற்காடு- விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலைப் பணி தொடக்கம்

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆற்காடு - விழுப்புரம் இடையே உள்ள இருவழிச் சாலையை ரூ.85 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

செஞ்சியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ. உடன் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்பிக்கள் தரணிவேந்தன், அண்ணாதுரை உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2026, 6:50 pm

விழுப்புரம் மாவட்டம், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆற்காடு - விழுப்புரம் இடையே உள்ள இருவழிச் சாலையை ரூ.85 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

செஞ்சியை அடுத்த விநாயகபுரம் கூட்டுச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா்கள் எம்.எஸ். தரணிவேந்தன், அண்ணாதுரை, செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனாா். உதவி கோட்டப் பொறியாளா் அக்பா் அலி வரவேற்றாா்.

முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரூ.85 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை தரம் உயா்த்தும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் செந்தில்குமாா், கோட்டப் பொறியாளா் உத்தண்டி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் செந்தமிழ் செல்வன், ஒன்றியச் செயலா்கள் நெடுஞ்செழியன், பச்சையப்பன், மாவட்ட விவசாய அணித் தலைவா் கணேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க ஏழுமலை, உதவிப் பொறியாளா்கள் பாலாஜி, விஷ்ணு பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.