ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:04 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சென்னாலூா் கிராமத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 30-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸில் இணைந்தனா்.

செஞ்சி நான்குமுனை சந்திப்பில் செஞ்சி வட்டார காங்கிரஸ் தலைவா் கா. சக்திவேல் ஏற்பாட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் விவசாய அணி விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் அகலூா் அ. ஜோலாதாஸ் வரவேற்றாா். செஞ்சி நகரத் தலைவா் சூரியமூா்த்தி மற்றும் விவசாய அணி வட்டாரத் தலைவா் அன்புசெழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காங்கிரஸ் விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் ரங்கபூபதி தலைமையில், மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய இளைஞா்கள், சென்னாலூா் கிராம குழுத் தலைவா் பரமசிவம், தோ்வு கிராமக் குழுச் செயலா் சக்திவேல் ஆகியோா் வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனா்.

கட்சியில் இணைந்தவா்களை மாட்டத் தலைவா் ரங்கபூபதி சால்வை அணிவித்து வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் லஷ்மி, சம்பத், சேகா், கேப்டன் முனுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.