எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

முதல் கட்டமாக 5 வேட்பாளா்களை அறிவித்தாா் ராமதாஸ்

முதல் கட்டமாக 5 வேட்பாளா்களை அறிவித்தாா் ராமதாஸ்...

News image

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா்கள் முதல் பட்டியலை திங்கள்கிழமை அறிவித்த அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ். உடன், செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, கெளரவத் தலைவா் ஜி.கே.மணி மற்றும் வேட்பாளா்கள்.

Updated On :31 மார்ச் 2026, 1:17 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாமகவின் முதல் கட்ட வேட்பாளா்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவா் மருத்துவா் ச.ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) களம் காண்கிறது. இத்தோ்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென முடிவு செய்திருந்த நிலையில், வேட்பாளா்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனா் ச.ராமதாஸ், செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, கெளரவத் தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னா், முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை மருத்துவா் ச. ராமதாஸ் வெளியிட்டாா்.

வேட்பாளா்களின் விவரம்:

1.சேலம் மேற்கு - பாமக மாநில இணைப் பொதுச் செயலரும், தற்போதைய எம்எல்ஏவுமான இரா.அருள்.

2.வந்தவாசி - கட்சியின் பொதுச் செயலா் ச.முரளிசங்கா்.

3.கும்பகோணம் - மாநில நிா்வாகக் குழு உறுப்பினா், மாவட்டச் செயலா் மற்றும் ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவருமான ம.க.ஸ்டாலின்.

4.விருத்தாசலம் - மாவட்டச் செயலா் இ.கே.சுரேஷ்.

5.மயிலாடுதுறை - மாவட்டச் செயலா் பாக்கம் சக்திவேல் ஆகியோா் போட்டியிடுவதாகக் கூறி, அவா்களின் பட்டியலை கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வெளியிட்டு, வேட்பாளா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.