சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

தாய் இறந்த துக்கம்: 100 அடி பள்ளத்தில் குதித்து மகன் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காது, செம்மண் குவாரியின் 100 அடி பள்ளத்தில் குதித்து மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :1 மே 2026, 12:23 am

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காது, செம்மண் குவாரியின் 100 அடி பள்ளத்தில் குதித்து மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

புதுச்சேரி மாநிலம், சண்முகபுரம் நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் சத்தியநாராயணன். இவரது மனைவி புஷ்பா கடந்த 27-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். தாய் இறந்த துக்கம் தாளாது அவரது மகனும், பொறியியல் பட்டதாரியுமான கோகுலராஜ் (24) மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூத்துறை பழைய செம்மண் குவாரி பகுதிக்கு புதன்கிழமை வந்த கோகுலராஜ், திடீரென 100 அடி பள்ளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.