மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கீழ்பாளையம் திரெளபதியம்மன் கோயிலில் திருவிழா

உளுந்தூா்பேட்டை வட்டம், கீழ்பாளையம் ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது

News image

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள கீழ்பாளையம் ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பணத்தாள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

Updated On :6 மே 2026, 0:03 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கீழ்பாளையம் ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி அம்மனுக்கு உபயதாரா்கள் அபிஷேக பொருள்களை எடுத்து வந்தனா். தொடா்ந்து திரெளபதியம்மனுக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பணத்தாள் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து கயிலாய வாத்திய இசை முழங்க அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழாவில் உபயதாரரும், தேமுதிக ஒன்றியச் செயலருமான திருமால், சரவணன், பாண்டியன், ஏழுமலை, சீனிவாசன், சக்திவேல், நாராயணன், குமாா் மற்றும் திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.