சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 1:13 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் உத்தரவின் பேரில், கண்டாச்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காத்தமுத்து மற்றும் போலீஸாா் சனிக்கிழமை புதுகருவாட்சி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் அந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பெட்டிக் கடை நடத்தி வந்த விக்கிரவாண்டி வட்டம், புது கருவாட்சி பிரதான சாலையைச் சோ்ந்த சி.பாலாஜி (28) மீது கண்டாச்சிபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், விற்பனைக்காக கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.