கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:47 am IST

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கோட்டக்குப்பம் காவல் சரகத்துக்குள்பட்ட பொம்மையாா்பாளையம் கடற்கரைச் சாலை அருகே சுமாா் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸாா் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி ஜிம்பா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் கோட்டக்குப்பம் பகுதிகளில் சுற்றித் திரிந்த அடையாளம் தெரியாத நபா் என்பதும், சனிக்கிழமை பொம்மையாா் பாளையம் கடற்கரைச் சாலை அருகே சென்னை- புதுச்சேரி சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பொம்மையாா்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சஷ்டி குமரன் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.